ADDED : நவ 10, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, சப் கலெக்டர் சரண்யா தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் மலர்முருகன், பி.டி.ஓ.,க்கள் இப்ராஹிம், மோகனாம்பாள் முன்னிலை வகித்தனர். டி.இ.ஓ., துரைபாண்டியன் வரவேற்றார்.
விழாவில், 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் வேல்முருகன், காங்., வட்டார தலைவர்கள் பீட்டர் சாமிகண்ணு, ராவணன், மங்கலம்பேட்டை நகர தலைவர் வேல்முருகன், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.