/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருமாவளவனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து
/
திருமாவளவனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து
ADDED : அக் 05, 2024 11:19 PM

கடலுார்: வி.சி., சார்பில் உளுந்துார்பேட்டையில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தியதற்காக, திருமாவளனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
வி.சி.,சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் அக்.2ம் தேதி மது மற்றும்
போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடந்தது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 5லட்சம் பேர் பங்கேற்றதால் மாநாடு வெற்றிபெற்றது. இதற்காக வி.சி.,தலைவர் திருமாவளவனை, கடலுார் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிடமணி, தலைமை நிலைய நிர்வாகிகள் ராஜேந்திரன், ரகுமான், நெப்போலியன், விடுதலை குமார், எழில்இமயன், சந்துரு, பாரி, இசையமுதன், தமிழ்மாறன் உட்பட பலர் உடனிருந்தனர்.