/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இடைநின்ற மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு
/
இடைநின்ற மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு
ADDED : ஆக 21, 2025 10:42 PM
விருத்தாசலம்,; விருத்தாசலம் பெரியார் நகரில், இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க, வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் இடைநின்ற பள்ளி மாணவர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில், விருத்தாசலம் வட்டார வள மைய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, விருத்தாசலம் பெரியார் நகர் நரிக்குறவர் தெருவில், ஆசிரியர் பயிற்றுனர் கனிமொழி தலைமையில், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டு, இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு அனுப்புமாறு, பெற்றோர்களை கேட்டுக்கொண்டனர்.
மேலும், பள்ளியில் வழங்கப்படும் சலுகைகள், மாணவர்களின் எதிர்காலம் குறித்து, பெற்றோர்களுக்கு எடுத்துகூறி, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.