/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 10, 2024 04:04 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சியில் கடலுார் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட துணை செயலாளர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி வரவேற்றார்.
அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ பங்கேற்று பேசினர். கூட்டத்தில், அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
கட்சி கிளை செயலாளர்கள் சம்பத், சிவராஜ், சேகர், கேவிந்தராஜ், லெனின் உட்பட பலர் பங்கேற்றனர்.