ADDED : பிப் 18, 2024 12:06 AM

சிதம்பரம்: அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் முன்னிலை வகித்தனர். ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில், ஜெ., பிறந்தநாளையொட்டி வரும் 24ம் தேதி கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்,
எம்.பி., தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும், வரும் 22ம் தேதி நெய்வேலியில், ஜெ., சிலை திறப்பு விழாவில் பொது செயலாளர் பழனிசாமி பங்கேற்பதையொட்டி, கிழக்கு மாவட்டம் சார்பில் திரளாக பங்கேற்பது,
ஜெ., பிறந்த நாள் பொது கூட்டங்களை சிறப்பாக நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் ரெங்கம்மாள், செல்வம், தேன்மொழி, செந்தில்குமார், அசோகன், வாசு முருகையன், சிவக்குமார், பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். சுரேஷ்பாபு நன்றி கூறினார்.