ADDED : அக் 18, 2024 06:51 AM

கடலுார்: கடலுாரில் அ.தி.மு.க., 53ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது
கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.,சிலைக்கு, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்பிரமணியன், மீனவரணி தங்கமணி, ஒன்றிய செயலாளர் காசிநாதன், பகுதி செயலாளர்கள் மாதவன், வெங்கட்ராமன், கந்தன், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், கவுன்சிலர் தஷ்ணா, தமிழ்ச்செல்வன் பங்கேற்றனர்.
திட்டக்குடி
திட்டக்குடியில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., வதிஷ்டபுரத்தில் கட்சி கொடி ஏற்றி, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
நகர செயலாளர் நீதிமன்னன், மங்களூர் ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், பாண்டியன், நல்லுார் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், முத்து, எம்.ஜி.ஆர்., இளைஞரணி சுப்பிரமணியன், நல்லுார் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் நடேசன் பங்கேற்றனர்.
விருத்தாசலம்
நகர செயலர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாநில ஜெ., பேரவை துணை செயலர் அருள் அழகன், தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலர் அருண், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். நகர துணை செயலர் அரங்க மணிவண்ணன், நகர அவை தலைவர் தங்கராசு பங்கேற்றனர்.