ADDED : அக் 20, 2024 07:04 AM
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் அ.தி.மு.க., ஆண்டு விழாவையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
காட்டுமன்னார்கோவில் நகரம் மற்றும் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் 53ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி ஞானவிநாயகர் கோவில் தெரு சந்திப்பில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வாசு முருகையன், சிவகுமார் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் எம்.ஜி.ஆர்.தாசன் வரவேற்றார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கொடியேற்றி இனிப்பு வழங்கி, ஏழை எளிய மகளிர்க்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், கட்சி நிர்வாகிகள் பாலமுருகன், குமார், டாக்டர் பாலசுப்பிரமணியன், குணசேகரன், செல்வம், தோத்தாத்திரி, முருகன், கர்ணா, மணிகண்டன், சேட்டு, மாணிக்கம், தனவல்லி, சுப்புலக்ஷ்மி, வசந்தகுமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.