/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க.,வில் தி.மு.க., 'பார்முலா' கட்சியினர் புலம்பலோ புலம்பல்
/
அ.தி.மு.க.,வில் தி.மு.க., 'பார்முலா' கட்சியினர் புலம்பலோ புலம்பல்
அ.தி.மு.க.,வில் தி.மு.க., 'பார்முலா' கட்சியினர் புலம்பலோ புலம்பல்
அ.தி.மு.க.,வில் தி.மு.க., 'பார்முலா' கட்சியினர் புலம்பலோ புலம்பல்
ADDED : பிப் 21, 2024 07:47 AM
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. அதற்காக, அனைத்து கட்சியினரும் சுறுசுறுப்படைந்து தங்களின் கூட்டணி பங்கீடு குறித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும், கூட்டணி இறுதி செய்யப்படாத கட்சியினரும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடலுார் லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க., கட்சியிலும் வேட்பாளர் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதில், அ.தி.மு.க., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஒருவருக்கு கடலுார் தொகுதியில் சீட் வழங்க தலைமை முடிவு செய்துள்ளது.
அதன்பின், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதில், ரூ.15 கோடி வரை தேர்தல் செலவுக்கு கட்சியில் செலுத்த வேண்டும் என, மறைமுறைமாக பேசியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அவ்வளவு பணத்தை கொடுக்க முடியாது என்பதால், தனக்கு சீட் வேண்டாம் என கழட்டி கொள்ள முடிவு செய்துள்ளாராம்.
தி.மு.க., வின் பார்முலா, அ.தி.மு.க., வினரும் கடைபிடிப்பதால், கடைநிலை தொண்டர்களுக்கு இனி சீட் என்பது அ.தி.மு.க.,வில் 'எட்டா கனியாக' மாறும் நிலை ஏற்பட்டுள்ளது என நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

