/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பலமான கூட்டணி அமைக்கும் மாஜி அமைச்சர் வளர்மதி பேச்சு
/
அ.தி.மு.க., பலமான கூட்டணி அமைக்கும் மாஜி அமைச்சர் வளர்மதி பேச்சு
அ.தி.மு.க., பலமான கூட்டணி அமைக்கும் மாஜி அமைச்சர் வளர்மதி பேச்சு
அ.தி.மு.க., பலமான கூட்டணி அமைக்கும் மாஜி அமைச்சர் வளர்மதி பேச்சு
ADDED : அக் 26, 2024 06:48 AM

கடலுார்: கடலுார் தெற்கு மாவட்டம், குறிஞ்சிப்பாடி மேற்கு, பேரூர் சார்பில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் குறிஞ்சிப்பாடியில் நடந்தது.
மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் ஆனந்த பாஸ்கரன் வரவேற்றார். தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் ஆலோசனை வழங்கி பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுகையில், '2026 சட்டசபை தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியை அ.தி.மு.க., கண்டிப்பாக கைப்பற்றும். பொதுச் செயலாளர் பழனிசாமி பலமான கூட்டணியை அமைப்பார்.
புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆராகி விட முடியாது. சிவாஜி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர் என நடிகர்கள் கட்சி ஆரம்பித்தார்கள். அது தோல்வியில் தான் முடிந்தது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து 2026ல் ஆட்சியை பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் அமைக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் மாநில ஜெ., பேரவை துணை செயலாளர்கள் சிவசுப்ரமணியன், பக்த ரட்சகன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ராஜசேகர், துணை செயலாளர்கள் ஞானச்செல்வி, கல்யாணசுந்தரம், கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் தேவநாதன், அவைத் தலைவர் முத்துலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டுரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய துணை செயலாளர் ஆனந்தி சிகாமணி நன்றி கூறினார்.