/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேத்தியாத்தோப்பில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
/
சேத்தியாத்தோப்பில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : ஜன 23, 2024 05:17 AM

சேத்தியாத்தோப்பு :  சேத்தியாத்தோப்பில், அ.தி.மு.க., சார்பில்,  எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
புவனகிரி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் மருதை முனுசாமி, கீரப்பாளையம்  ஒன்றிய செயலாளர்கள்  வினாயகமூர்த்தி, கருப்பன், சின்னரகுராமன், பேரூர் செயலாளர் மனோகரன், ஒன்றிய சேர்மன் மேனகாவிஜயகுமார், முன்னாள் நகர செயலாளர் நன்மாறன் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட மாணிவரணி தலைவர் வீரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
பேரூர் செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் துவக்க உரையாற்றினார்.
முன்னாள் அமைச்சர் பாலசுப்ரமணியன், செய்தி தொடர்பாளர் அதிவீரராமபாண்டியன், தலைமை கழக பேச்சாளர் காவேரி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், கடலுார் மேற்குமாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேசினார்.
ஒன்றிய அவைத்தலைவர் செல்வராசு, பொருளாளர் சங்கர், ஜெயசீலன், ராஜாசாமிநாதன், பிரித்திவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புவனகிரி பேரூர் செயலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

