/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆலோசனை படிவம்: பா.ஜ.,வினர் சேகரிப்பு
/
ஆலோசனை படிவம்: பா.ஜ.,வினர் சேகரிப்பு
ADDED : மார் 14, 2024 11:34 PM

சிதம்பரம்: சிதம்பரம் பஸ் நிலையத்தில் பா.ஜ., சார்பில், வளர்ச்சி அடைந்த பாரதம் என்னும் லட்சியத்தை அடைய, பிரதமர் நரேந்திர மோடிக்கு பொதுமக்களின் ஆலோசனைகளை படிவத்தில் எழுதி சேகரிக்கப் பட்டது.
நிகழ்ச்சியில் பா.ஜ., முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
அகில பாரத சைவ பிரசார சபா நிறுவனர் சம்பந்தம், மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன், நகர பொதுச்செயலாளர் குமார், அரசு நலத்திட்ட பிரிவு பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தலைவர் சுகந்தராஜன், காரியகர்த்தா ரங்காசேட். மணிவேல் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களிடம் ஆலோசனை படிவத்தை பெட்டியில் சேகரித்தனர்.
இந்நிகழ்ச்சியை சிதம்பரம் நகரில் கீழசன்னதி, மேலரதவீதி கஞ்சித்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

