/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை
/
கரும்பில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை
ADDED : மார் 05, 2024 06:01 AM
நெல்லிக்குப்பம்: கரும்பில் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, இ.ஐ.டி., பாரி நிர்வாகம் சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு வழங்கியுள்ள ஆலோசனை:
நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் கோட்ட பகுதிகளில் கரும்பில் வெள்ளை ஈ பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இப்பூச்சி தாக்கிய வயல்களில் பெரும்பாலும் தண்ணீர் தேங்கியுள்ளது. வறட்சியாக உள்ள வயல்களிலும் தாக்குதல் அதிகமாக உள்ளது.
இலைகள் இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிறமாக மாறி பின் படிபடியாக நுனியிலிருந்து கீழ்நோக்கி இலைகள் காய்ந்துவிடும். பாதிக்கப்பட்ட இலைகளில் வெள்ளை மற்றும் கருப்பு பூச்சிகள் காணப்படும். மேலும் இலைகள் மீது கரும்பூசண படலம் படர்ந்து காணப்படும்.
இப்பூச்சியை கட்டுபடுத்த கரும்பு பயிரில் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும். ஐந்து மற்றும் ஏழாவது மாதங்களில் சோலையை உரிக்க வேண்டும். யூரியா உரத்தை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
பூச்சி தாக்குதல் குறைவாக காணப்பட்டால் ஏக்கருக்கு 500 கிராம் அசிபேட், 75 சதவீத எஸ்.பி.மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு 250 மிலி மோவெண்டோ எனர்ஜி மருந்தை. 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

