/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நேரடி நெல்விதைப்பில் களை நிர்வாகம் வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை
/
நேரடி நெல்விதைப்பில் களை நிர்வாகம் வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை
நேரடி நெல்விதைப்பில் களை நிர்வாகம் வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை
நேரடி நெல்விதைப்பில் களை நிர்வாகம் வேளாண் உதவி இயக்குனர் ஆலோசனை
ADDED : அக் 05, 2024 04:24 AM

கடலுார் : குமராட்சி வட்டார வேளாண் உதவிஇயக்குநர் தமிழ்வேல் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
குமராட்சி பகுதியில் சுமார் 20ஆயிரம் ஏக்கர் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. விதைத்த 3 முதல் 8 நாட்களுக்குள் ஏக்கருக்கு களை முளைக்கும் முன் பயன்படுத்தப்படும் களைக்கொல்லியான பிரிட்டிகுளோர் அல்லது பென்டிமெத்தலின் 400மி.லி., மருந்தை 26கிலோ மணலுடன் கலந்து வயலில் போதுமான ஈரப்பதம் இருக்கும்போது தெளித்தால் கோரை வகைகளை கட்டுப்படுத்தலாம்.
நேரடி நெல் விதைப்பில் களைகள் முளைத்த பிறகு தெளிக்க வேண்டிய களைக்கொல்லியான பிஸ்பைரிபாக் சோடியம் (நாமினிகோல்டு) ஏக்கருக்கு 100மில்லி நெல் விதைத்த 8-15ம் நாளில் களைச்செடி 2-4 இலை பருவத்தில் கை தெளிப்பான் மூலம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம் அல்லது குளோரிமுரான் ஈத்தைல் மெட்சல்பியூரான் மீதைல்(ஆல்மிக்ஸ்) களைக்கொல்லியை ஏக்கருக்கு 12கிராம் என்ற அளவில் நெல் விதைத்த 20-35 தெளிப்பான் மூலம் தெளித்து அகன்ற இலைகளை கட்டுப் படுத்தலாம்.
களைக்கொல்லிகளை தெளிப்பதற்கு முன் வயலில் போதுமான ஈரப்பதத்தை உறுதி செய்ய வேண்டும்.
தெளிப்பான்களில் தட்டை விசிறி வகை நாசில்களையே பயன்படுத்த நேரடி நெல் விதைப்பு முறை சாகுபடியில் களைகளைச் சிறந்த முறையில் கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.