/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளுக்கு 'அட்வைஸ்'
/
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளுக்கு 'அட்வைஸ்'
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளுக்கு 'அட்வைஸ்'
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளுக்கு 'அட்வைஸ்'
ADDED : அக் 18, 2025 07:13 AM

விருத்தாசலம்: தீபாவளி பண்டிகை முன்னிட்டு, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் ரயில் நிலைய நடைமேடை 2ல் நடந்த நிகழ்ச்சியில் , இருப்புப்பாதை இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி, ரயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் தீபக் பவந்த் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் பங்கேற்றனர்.
அதில், எளிதில் தீப்பற்றும் பட்டாசு உள்ளிட்ட பொருட்களை ரயிலில் எடுத்து வரக்கூடாது.
படிக்கட்டுகளில் அமர்ந்து பயணிக்க கூடாது. ரயிலில் அடையாளம் தெரியாத பயணிகளிடம் பிஸ்கெட், சிப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டாம்.
நடைமேடையில் இருந்து பாதுகாக்கப்பட்ட உயர்மட்ட பாலம் வழியாக பயணிகள் செல்ல வேண்டும். ரயில் பாதையை கடந்து செல்ல கூடாது. மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டு ரயில் பாதையை கடந்து செல்லக் கூடாது. பயணிகளின் உடமைகள், நகை உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக எடுத்து வர வேண்டும்.
குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறை நிகழ்ந்தால் 139 என்ற கட்டணமில்லா எண்ணில் அழைத்தால் உடனடியாக ரயிலில் உள்ள போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவர் போன்ற விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் வழங்கி, ஒலிப்பெருக்கியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், காரைக்கால் - பெங்களூரு எக்ஸ்பிரஸ், மதுரை - சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளின் உடமைகள் சோதனை போலீசார் மூலம் செய்யப்பட்டது.