
பெண்ணாடம், - பெண்ணாடத்தில் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் பேரின்பம் தலைமை தாங்கினார். மாநில துணை செயலர் முருகானந்தம், மாநில பொருளாளர் பாண்டுரங்கன், மாநில மகளிரணி காசியம்மாள் முன்னிலை வகித்தனர்.
நல்லுார் ஒன்றிய தலைவர் பழனிமுத்து வரவேற்றார். பஞ்சமி நில மீட்பு மாநில துணை செயலர் பெரியசாமி, மங்களூர் ஒன்றிய தலைவர் ராமலிங்கம், ஒன்றிய செயலர்கள் சுரேஷ்குமார், சாமிதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், வரும் லோக்சபா தேர்தலில் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்கும் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது. ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். ஆதிதிராவிட பகுதிகளில் சாலை, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலர் ராஜா நன்றி கூறினார்.

