/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூமிதானம் செய்த நிலங்கள் ஆக்கிரமிப்பு அளவீடு பணிக்கு எதிர்ப்பால் பரபரப்பு
/
பூமிதானம் செய்த நிலங்கள் ஆக்கிரமிப்பு அளவீடு பணிக்கு எதிர்ப்பால் பரபரப்பு
பூமிதானம் செய்த நிலங்கள் ஆக்கிரமிப்பு அளவீடு பணிக்கு எதிர்ப்பால் பரபரப்பு
பூமிதானம் செய்த நிலங்கள் ஆக்கிரமிப்பு அளவீடு பணிக்கு எதிர்ப்பால் பரபரப்பு
ADDED : நவ 12, 2024 08:15 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பூமிதானம் செய்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே எருமனுார் கிராம சாலையோரம், மணலுாரில் தமிழ்நாடு பூமிதான இயக்கம் சார்பில் வயலுார், நாச்சியார்பேட்டை பகுதிகளை சேர்ந்த 22 தாழ்த்தப்பட்டோருக்கு கடந்த 1968 மற்றும் 1989ம் ஆண்டுகளில் தலா 1.11 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
தானமாக வழங்கப்பட்ட நிலங்களை சுற்றியுள்ள உரிமையாளர்கள் சிலர், தாழ்த்தப்பட்டோர் நிலங்களை கையகப்படுத்தி, பயிர் செய்து வந்தனர். இது தொடர்பாக 20 ஆண்டுகளாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நிலத்தை அளவீடு செய்து, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ., மாவட்ட தலைவர் கோவிலானுார் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் டாக்டர் ராஜ்குமார் உள்ளிட்டோர், கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் முறையிட்டனர்.
அதை தொடர்ந்து, நேற்று வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது. இதற்கு, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அளவீடு செய்யும் பணி பாதித்தது.
தானமாக நிலம் பெற்றவர்கள், ஆக்கிரமிப்பாளர்களை கண்டித்து வயலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உள்ளிட்ட போலீசார் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
வருவாய்த் துறை பதிவேட்டில் பூமிதான இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட நிலம் என உள்ளதாகவும், அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரித்தனர்.
இது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் முறையிடுமாறு ஆக்கிரமிப்பாளர்களிடம் தெரிவிக்கப் பட்டது.

