/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரருக்கு அக்னி நட்சத்திர பூஜை
/
விருத்தகிரீஸ்வரருக்கு அக்னி நட்சத்திர பூஜை
ADDED : மே 06, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், ; விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு அக்னி நட்சத்திர சிறப்பு வழிபாடு துவங்கியது.
அக்னி நட்சத்திரம் துவங்கியதால், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு ஒரு கால பூஜை கூடுதலாக நடந்தது. இதையொட்டி, வழக்கமான உச்சிகால பூஜை முடிந்ததும், விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு இளநீர், பன்னீர், பச்சை கற்பூரம், வெட்டிவேருடன் கூடிய தாரா பாத்திரத்தில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
உலக நன்மை, பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அக்னி நட்சத்திரம் முடியும் வரை சிறப்பு அபிேஷகம் தொடரும் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.