/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ரயில் மறியல் ஒத்திவைப்பு
/
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ரயில் மறியல் ஒத்திவைப்பு
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ரயில் மறியல் ஒத்திவைப்பு
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ரயில் மறியல் ஒத்திவைப்பு
ADDED : டிச 29, 2024 06:11 AM

சிதம்பரம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, சிதம்பரத்தில் நாளை நடக்க இருந்த ரயில் மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
சிதம்பரத்தில் நிற்காமல் செல்லும், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் சென்னை- காரைக்கால் விரைவு ரயில்கள், ராமேஸ்வரம் - அயோத்தி கண்டோன்மென்ட் அதி விரைவு ரயில்கள் சிதம்பரத்தில் நின்று செல்ல வலியுறுத்தி, சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி சார்பில் நாளை (30ம் தேதி) ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. சப் கலெக்டர் ராஷ்மிராணி தலைமை தாங்கினார். திருச்சி கோட்ட ரயில்வே வர்த்தக மேலாளர் மோகனப்பிரியா, ரயில் பயணிகள் சங்கத் தலைவர் அப்துல் ரியாஸ், இந்திய கம்யூ., சேகர், மா.கம்யூ.,மாவட்ட குழு ரமேஷ்பாபு, சிதம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், காங்., நகர தலைவர் மக்கின், அ.தி.மு.க., முன்னாள் நகர மன்ற சேர்மன் குமார், ரயில் பயணிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சிவராம வீரப்பன், அப்துல் கபூர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ரயில்வே வர்த்தக மேலாளர் மோகனப்பிரியா பேசுகையில், ரயில்வே உயர் அதிகாரிகள் கவனத்திற்கு, கோரிக்கைகள் கொண்டு செல்லப்பட்டு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.
அதையேற்று, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக, போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

