/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு

ADDED : அக் 09, 2025 11:36 PM

பரங்கிப்பேட்டை: தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் கடலுார் மாவட்டத்தில் உள்ள 167 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர்கள் சங்கததினர், 25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதனால், கடலுார் மாவட்டத்தில் உள்ள 167 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 500க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளது. தற்போது, மாவட்ட முழுவதும் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு, நடவு பயிர் செய்ய நாற்றங்கால் செய்துள்ளனர்.
விவசாயிகளுக்கு தேவையான பயிர் கடன் மற்றும் உரம் வாங்க முடியாமல் தவிக்ககின்றனர். மேலும், ரேஷன் கடைகள் பூட்டப்பட்டு இருப்பதால் பண்டிகை காலத்தில் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.