/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காமாட்சிபேட்டையில் ரூ.37 கோடி மதிப்பில் தடுப்பணை பணிகள்
/
காமாட்சிபேட்டையில் ரூ.37 கோடி மதிப்பில் தடுப்பணை பணிகள்
காமாட்சிபேட்டையில் ரூ.37 கோடி மதிப்பில் தடுப்பணை பணிகள்
காமாட்சிபேட்டையில் ரூ.37 கோடி மதிப்பில் தடுப்பணை பணிகள்
ADDED : அக் 09, 2025 11:37 PM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த காமாட்சிபேட்டை கெடிலம் ஆற்றங்கரையில் ரூ.37 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்.
பண்ருட்டி அடுத்த கமாட்சிபேட்டை கிராமத்தில் கெடிலம் ஆற்றங்கரையில் ரூ.37கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி அமைச்சர் கணேசன் துவக்கிவைத்தார். எம்.எல்.ஏ.சபா ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
தடுப்பணை குறித்து அமைச்சர் கூறியதாவது: தடுப்பணை அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து காமாட்சிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 234 குழாய் கிணறுகள் மூலம் சுமார் 3446 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 10,000 பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.
செம்மேடு, எலந்தம்பட்டு, சிறுவத்தூர் ஆகிய பகுதிகளில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.36 கோடி மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்பு பணிகளும், ரூ.14 கோடி மதிப்பீட்டில் திருவாமூர் பகுதியில் தெற்கு மலட்டாற்றில் தடுப்பணை சீரமைப்பு மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளும், கெடிலம் ஆற்றின் குறுக்கே காமாட்சிப்பேட்டை கிராமத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் தடுப்பணையும் என நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நீர்வளத்துறை சார்பாக சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெறுகிறது என்று அமைச்சர் கூறினார்.
இதில் செயற்பொறியாளர் நீர்வளத்துறை பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் ரஜினிகாந்த், பி.டி.ஒ.க்கள் மீராகோமதி,பாபு, தாசில்தார் பிரகாஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.