ADDED : அக் 09, 2025 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ரவி தலைமை தாங்கினார். விழாவில் அஞ்சல் துறை குறித்த விழிப்புணர்வு குறித்தும். பள்ளி மாணவர்களுக்கு இந்திய தபால் துறையின் சிறப்பு குறித்தும் தற்போது அஞ்சல் துறையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சேவை குறித்தும் நிகழ்ச்சிகள் நடந்தது.
பள்ளி மாணவர்கள் பண்ருட்டி தபால் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தபால் நிலைய தலைமை அலுவலர் தபால் துறை செயல்பாடு குறித்த நேரடி விளக்கம் அளித்தனர். இதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.