/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் வளர்ச்சி விழிப்புணர்வு கூட்டம்
/
வேளாண் வளர்ச்சி விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜூன் 09, 2025 06:32 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் வேளாண் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கடலுார் வேளாண் இணை இயக்குனர் லட்சுமி காந்தன் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ், சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிலைய முதன்மை விஞ்ஞானி எழில் பிரவினா, மூத்த விஞ்ஞானி அரித்திரா பெரா, வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் காயத்ரி, மேலாளர் ரமேஷ், உதவி மேலாளர் கார்த்திக் மணி, இப்கோ நிறுவன கண்காணிப்பாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், காரீப் பருவத்தில் நேரடி நெல் விதைப்பு, இயந்திர நடவிற்கான மானியம், உளுந்து விதை உற்பத்தி, சவுக்கு சாகுபடி, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.