ADDED : அக் 01, 2024 06:43 AM
சிதம்பரம்: சிதம்பரத்தில், கோரிக்கைகள் வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்சேரலாதன், மணி, ஜெயக்குமார், கோபிநாத், வட்ட செயலாளர் வெற்றி வீரன் முன்னிலை வகித்தனர்.
புவனகிரி ஜெயங்கொண்டான், மருதுாரில் அருந்ததியர் மற்றும் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டையில் பழங்குடியினர் மக்கள் பயன்படுத்தும், சுடுகாடுகளில் ஆக்கிமிப்புகளை அகற்றி சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன், மாவட்ட துணைத் தலைவர் ஜீவா, பன்னீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து சப் கலெக்டர் ராஷ்மிராணியிடம் மனு அளித்தனர்.