/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு பயிற்சி
/
வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு பயிற்சி
ADDED : செப் 29, 2025 12:52 AM
விருத்தாசலம்,: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பயன்பாடு பயிற்சி நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் பயிற்சியை துவக்கி வைத்து, வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
உதவி பொறியாளர் வீரசுப்ரமணியன், உதவி பொறியாளர் அஜிதா ஆகியோர் பொறியியல் துறை திட்டம், இயந்திரங்கள் குறித்து விளக்கினர்.
மேலும், வி.எஸ்.டி., இயந்திர விற்பனை முகவர் புனிதா அந்தோணி, டிராக்டர், பவர் டில்லர், கரை அணைக்கும் கருவி, களை எடுக்கும் கருவிகளில் ஏற்படும் சிறிய பழுதுகளை சரி செய்வது மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
உழவியல் துறை கலைச்செல்வி, நீரில் கரையும் உரங்கள், ரசாயன உரங்கள், கனிம உரங்கள் பற்றி விளக்கினார்.
வேளாண் அதிகாரிகள் கண்ணன், சுகுமாறன், உமா, காயத்ரி, ஜெயக்குமார் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.