/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் திட்டங்கள்: இணை இயக்குநர் ஆய்வு
/
வேளாண் திட்டங்கள்: இணை இயக்குநர் ஆய்வு
ADDED : பிப் 21, 2024 10:52 PM

கடலுார்: கடலுார் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்து இணை இயக்குநர் ஆய்வு செய்தார்.
கடலுார் அடுத்த கீழ்அழிஞ்சிப்பட்டில் குமார் என்பவர் நிலத்தில் மணிலா விதைப்பண்ணை மற்றும் புதுக்கடையில் தேவநாதன் என்பவர் நிலத்தில் பனிப்பயிர் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பண்ணைகளை கடலுார் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கண்ணையா ஆய்வு செய்தார். அப்போது, விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களை எடுத்துக்கூறினார்.
மேலும், நல்லாத்துாரில் வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயிக்கு வழங்கப்பட்ட சுழற்கலப்பையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். துாக்கணாம்பாக்கம் துணை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடுபொருட்களை ஆய்வு செய்தார்.
அப்போது, கடலுார் வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ், உதவி விதை அலுவலர் விஜயசண்முகம், உதவி வேளாண் அலுவலர் ரஜினிகாந்த் உடனிருந்தனர்.