ADDED : டிச 05, 2025 05:30 AM

புதுச்சத்திரம்: மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில், வேளாண் துறையினர் ஆய்வு செய்தனர்.
'டிட்வா' புயல் காரணமாக பெய்த தொடர் மழையால், புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிபள்ளம், வாண்டையாம்பள்ளம், நைனார் குப்பம், சுப்பம்மாள்சத்திரம், காயல்பட்டு, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிட்டுள்ள நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி, நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
இது குறித்து தகவலறிந்த வேளாண் இணை இயக்குநர் லட்சுமிகாந்தன், வேளாண் துணை இயக்குனர்கள் அமிர்தராஜ், விஜயராகவன், வேளாண் உதவி இயக்குனர் மலர்வண்ணன், கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சசிகுமார் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட, வயல்களில் வருவாய்த்துறையினர் மற்றும் வேளாண்றையினர் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
வேளாண் அலுவலர் வேல்முருகன், துணை வேளாண் அலுவலர் முத்தையன், உதவி வேளாண் அலுவலர் அசோக், முன்னோடி விவசாயிகள் ராமதாஸ், துரைராமலிங்கம், கருணாநிதி, விஜயபாஸ்கர், பாஸ்கரன், ராஜசேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

