ADDED : மார் 22, 2025 08:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவர்களின் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட துவக்க விழா, புவனகிரி அழிச்சிக்குடியில் நடந்தது.
முன்னாள் ஊராட்சிதலைவர் அமிர்தவள்ளி கலியமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் துணைத் தலைவர் இளையராஜா, ஆத்ம திட்ட இயக்குனர் சாரங்கபாணி முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் நடராஜன் முகாமை துவக்கி வைத்துப் பேசினார். பல்கலைக்கழக பேராசிரியர் தமிழ்ச்செல்வி, இணை பேராசிரியர் ஜெயா பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் உண்ணாமலை, ஊராட்சி செயலாளர் ஜெயசங்கர், பயிற்சி மாணவியர்கள் பங்கேற்றனர்.