/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் மாணவிகள் பயிற்சி திட்டம் துவக்கம்
/
வேளாண் மாணவிகள் பயிற்சி திட்டம் துவக்கம்
ADDED : டிச 29, 2025 05:57 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சாக்காங்குடி கிராமத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை வேளாண்புல இறுதியாண்டு மாணவர்களின் அனுபவ பயிற்சி திட்டம் துவக்க விழா நடந்தது.
மாணவர்கள் குழு தலைவர் கோமதி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி துணை தலைவர் கண்ணன், வேளாண்புல மாணவிகள், காயத்திரி, கோபிகா, கோகுலநந்தினி, ஹரிதரணி, ஹரிணி, கவுதமி, குணலட்சுமி முன்னிலை வகித்தனர்.
அண்ணாமலைப் பல்கலை விரிவாக்கத்துறை பேராசிரியர் ஜெயா பேசினார்.
கிராமத்தில் மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை குறைக்கும் விதமாக வாழை இலையில் அழைப்பிதழ், பாக்கு மட்டை யில் உணவு தட்டு, இயற்கை நுாலிழையில் துணிப்பை போன்றவற்றை பயன்படுத்துமாறு விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர்.
மேலும் மாணவிகள் ஒருங்கிணைந்து சொந்த செலவில் பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

