/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்க கோரிக்கை
/
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 29, 2025 05:57 AM

திட்டக்குடி: நெய்வேலி இரண்டாம் சுரங்கத்திலிருந்து, கூட்டுக்குடிநீர் திட்டத்தில், 20 ஆண்டுகளுக்கு என்.எல்.சி., இந்தியா நிறுவனம், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு தண்ணீர் வழங்குகிறது.
இத்திட்டத்திற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 479 கோடி ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், நீர் உந்து நிலையங்கள் மற்றும் வினியோக வசதிகள் போன்றவற்றை அமைக்கப்பட்டு வருகிறது. 95 சதவீத பணிகள் முடிந்து, குழாய்கள் மூலம் சோதனை அடிப்படையில் தண்ணீர் இயக்கப்படுகிறது.
இதில் பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வெளியேறுகிறது. இந்நிலையில், திட்டக்குடி அடுத்த கூடலுார் ஊராட்சியில் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையோரம் கடந்த சில மாதங்களாக கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

