/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் மாணவர்கள் விவசாய கண்காட்சி
/
வேளாண் மாணவர்கள் விவசாய கண்காட்சி
ADDED : ஏப் 26, 2025 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு :   கோ.ஆதனுார் கிராமத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவர்கள் சார்பில் விவசாய கண்காட்சி நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவர்கள், வேளாண் அனுபவ திட்டத்தின் கீழ் கோ.ஆதனுாரில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக அதே கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம், மாடித்தோட்டம், பூச்சி மேலாண்மை, நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் முறை குறித்த விவசாய கண்காட்சி நடத்தினர்.
விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

