தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வேளாண் மாணவர்கள் அனுபவ திட்ட பயிற்சி

கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வேளாண் மாணவர்கள் அனுபவ திட்ட பயிற்சி

கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வேளாண் மாணவர்கள் அனுபவ திட்ட பயிற்சி


UPDATED : நவ 28, 2026 04:21 AM

ADDED : நவ 28, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 04:21 AM ADDED : நவ 28, 2026 04:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் தங்கி பல்வேறு ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட பயிற்சி பெற்று வருகின்றனர்.

மாணவர்ளுக்கு பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலைய வேளாண் நுண்ணுயிரியல் உதவி பேராசிரியர் காயத்ரி வழிகாட்டுதலின் பேரில் பல பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மாணவர்கள் கடலுார் கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, பயிற்சி மைய தலைவர் வெங்கடபதி மாணவர்களுக்கு மையத்தின் முக்கிய பணிகளான கால்நடைகளின் நலனைப் பாதுகாத்தல், நோய்களைக் கண்டறிதல், நோய் தடுக்கும் முறைகள், கால்நடை வளர்ப்பில் பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறைகள், தடுப்பூசி செலுத்துதலின் அவசியம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கால்நடை மருத்துவச் சேவைகள் குறித்து விளக்கினார்.

விவசாயிகளுக்குக் கால்நடை வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குதல், கால்நடைகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், இனப்பெருக்க மேலாண்மை, கன்றுப் பராமரிப்பு, தீவன மேலாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் அகிலன், அப்ரின்பிராங், அன்பு, அங்கு வீரகாளிதாஸ், அகிலன், அருண்குமார், பாலகிருஷ்ணன். பரத், செழியன், தெய்வபிரகாஷ், தினேஷ்குமார், துர்காபிரசாத் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us