/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் மாணவிகள் செயல்முறை விளக்கம்
/
வேளாண் மாணவிகள் செயல்முறை விளக்கம்
ADDED : ஏப் 09, 2025 07:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் வேளாண் கல்லுாரி மாணவிகள், விவசாயிகளுக்கு மண் மாதிரி எடுக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
திட்டக்குடி ஜெ.எஸ்.ஏ., வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் நடுவீரப்பட்டில் தங்கி வேளாண் சார்ந்த பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நடுவீரப்பட்டு சாலக்கரை பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு, மாணவிகள் மகாலட்சுமி, மகேஸ்வரி, மோனிகா, நிஸ்ஃபா குர்ஷீத், நித்யாஸ்ரீ, நிவேதா, பவித்ராதேவி ஆகியோர் மண் மாதிரி எடுக்கும் முறை, அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறி செயல்முறை விளக்கம் அளித்தனர்.

