/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் பயிற்சி வகுப்புகள் 10ம் தேதி முதல் துவக்கம்
/
வேளாண் பயிற்சி வகுப்புகள் 10ம் தேதி முதல் துவக்கம்
வேளாண் பயிற்சி வகுப்புகள் 10ம் தேதி முதல் துவக்கம்
வேளாண் பயிற்சி வகுப்புகள் 10ம் தேதி முதல் துவக்கம்
ADDED : டிச 08, 2024 04:41 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் இம்மாத பயிற்சி வகுப்புகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 10ம் தேதி பழங்கள் மற்றும் காய்கறிகளில் சாகுபடி மேலாண்மை மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், மேலும் அன்று ரங்கநாதபுரத்தில் தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ மேலாண்மை பயிற்சி நடக்கிறது.
11ம் தேதி கால்நடை வளர்ப்பு, தீவனப்பயிர்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு முறைகள், 12ம் தேதி வேளாண்மையில் வங்கிகளின் பங்கு, 13ம் தேதி வேளாண் இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்த பயிற்சி.
16ம் தேதி கூட்டு இன மீன் வளர்ப்பு, 17ம் தேதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி, அன்று திட்டக்குடியில் மகளிர் தொழில்முனைவோர்களுக்கான மதிப்பு கூட்டுதல் பயிற்சி.
18ம் தேதி விருத்தாசலம் அடுத்த பரவளூரில் கால்நடை வளர்ப்பு, தீவனப்பயிர்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு முறைகள், 19ம் தேதி எடகொண்டான்பட்டு கிராமத்தில் வேர்க்கடலையில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சி.
20ம் தேதி சத்தியவாடியில் கால்நடை வளர்ப்பு, தீவனப்பயிற்சி உற்பத்தி மற்றும் பராமரிப்பு முறைகள், அன்று வேளாண் அறிவியல் நிலையத்தில் முந்திரி பயிரில் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி.
24ம் தேதி அறிவியல் நிலையத்தில் காளாண் வளர்ப்பு பயிற்சி, அன்று ஆலிச்சிகுடியில் கால்நடை வளர்ப்பு, தீவனப் பயிர்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு முறைகள், 26ம் தேதி வள்ளியம் கிராமத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி, 27ம் தேதி மேமாத்துாரில் பயறு வகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பயிற்சியும் நடக்கிறது.
30ம் தேதி நடுவீரப்பட்டு பகுதியில் கரும்பில் படரும் கொடி மேலாண்மை பயிற்சி நடக்கிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.