ADDED : ஏப் 02, 2025 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் தலைமை தபால் அலுவலகம் முன தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் முருகையன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு சின்னதுரை, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலர் சுப்ரமணியன், மாவட்ட தலைவர் சுப்ரமணியன், மங்களூர் ஒன்றிய செயலர் நிதி உலகநாதன், விருத்தாசலம் வட்ட செயலர் பாலமுருகன், மாவட்ட தலைவர் அம்பிகா மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
சேதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை வட்டியுடன் வழங்க வேண்டும். ஒருநாள் ஊதியமாக 700 ரூபாய் வழங்க வேண்டும்.
வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டடத்தில் வலியுறுத்தப்பட்டன.

