/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 09, 2025 02:14 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட துணை செயலாளர்கள் பாண்டியன், போஸ்கோ ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டபொறுப்பாளர் பழனிசாமி, கிளை செயலாளர் வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சுப்ரமணியன் கண்டன உரையாற்றினார். இதில் நூறு நாள் வேலை வழங்குதல், நூறுநாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கு தீபாவளி போனஸ் வழங்குதல், முன்னாள் முதல்வர் கருணாநிதி ந ல வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் வட்ட செயலாளர்கள் விநாயகம், முருகவேல், மாவட்டக்குழு சுந்தர்லிங்கம், மனோகர், ஜாஸ்மின், வேல்முருகன், ஜெயா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.