/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 19, 2025 11:57 PM
திட்டக்குடி: திட்டக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
வட்ட குழு உறுப்பினர்கள் மாணிக்கவேல், மாயவன், சுமதி, முத்துலட்சுமி, ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கார்முகில் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த 16ம் தேதி வேப்பூர் அடுத்த கழுதுார், அரியநாச்சியில் மக்காசோளத்திற்கு களையெடுக்கும் போது மின்னல் தாக்கி இறந்த அரியநாச்சி ராஜேஸ்வரி, கழுதுார் கனிதா, பாரிஜாதம், சின்னப்பொண்ணு ஆகியோரது குடும்பங்களுக்கு நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.