ADDED : ஜூன் 25, 2026 05:29 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்மாநில விவசாய தொழிலா ளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, அரசன் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் துரை, விவசாய சங்க மாவட்ட செயலாளர் சேகர், தெருவோர வியாபாரிகள் சங்க மாநில செயலாளர் குளோப், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்ரமணியன், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், சிவக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் லட்சுமி, சக்திவேல், மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பழைய தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் ஆண்டிற்கு 200 நாள் வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு நாள் ஊதியமாக 700 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
