ADDED : செப் 16, 2026 04:04 PM
திட்டக்குடி. செப். 17–
திட்டக்குடியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டக்குழு சின்னதுரை தலைமை தாங்கினார். செயலாளர் மணிகண்டன், பெண்ணாடம் நகரம் அமர்நாத் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை செயலாளர் சுப்ரமணியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகையன், ஒன்றிய செயலாளரகள் மங்களூர் உலகநாதன், நல்லூர் கடவுள் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு தேவா, மாதர் சங்க மாவட்ட தலைவர் அம்பிகா, நகர செயலாளர் செந்தில்முருகன், செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், திட்டக்குடி தாலுகாவில் உள்ள எழுத்துார், திடீர் குப்பம், ராமநத்தம் காந்தி நகர், பெண்ணாடம் வாள்பட்டறை, செம்பேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். தொகுப்பு வீடு கட்டும் பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் வழங்குவது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
