/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண்துறை, வருவாய்த்துறை டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் இடையே 'குஸ்தி'
/
வேளாண்துறை, வருவாய்த்துறை டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் இடையே 'குஸ்தி'
வேளாண்துறை, வருவாய்த்துறை டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் இடையே 'குஸ்தி'
வேளாண்துறை, வருவாய்த்துறை டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் இடையே 'குஸ்தி'
ADDED : டிச 17, 2025 06:38 AM
கா ட்டுமன்னார்கோவில் குமராட்சி டெல்டா பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட 'டிட்வா' புயலால் கன மழை பெய்து நெல் பயிர்கள் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பகுதியில் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு செய்து நிவாரண வழங்க அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியினை துவக்கினர்.
இந்நிலையில், வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதிகளில், நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு மேற்கொள்ள, வேளாண் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையொட்டி, கடலுார் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து காட்டுமன்னார்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர் கூட்டம் நடந்தது.
இதில் வி.ஏ.ஓ.,க்கள் கிராமங்களில் பாதிக்கப்பட்ட நிலங்களை கண்டறிந்து, அந்த நிலத்திற்கு உரிய பட்டாதாரரை பாதிக்கப்பட்ட நிலத்தில் வைத்து போட்டோ எடுத்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு வி.ஏ.ஓ.,க்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள், ' நாங்கள் இப்படி எல்லாம் கணக்கெடுப்பு செய்ய முடியாது.
நீங்கள் சொல்லிவிட்டு அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பீர்கள். நாங்கள் கணக்கெடுப்பு செய்யும்போது விவசாயிகளிடமிருந்து, எதிர்ப்பை சந்திக்க நேரிடும். நாங்கள் அனைத்து சர்வே நம்பர்களையும் குறித்து கொடுத்து விடுகிறோம். வேளாண்துறையில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்து அதனை விவசாயிகளுக்கு பங்கீடு செய்து கொடுக்கலாம், ' என்றனர்.
இதனால் கடுப்பான வேளாண் துறை அதிகாரிகள், 'இதை சொல்லத்தான் உங்களை அழைத்தாமோ,' என கடிந்து கொண்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வி.ஏ.ஓ., க்கள் நீங்கள் கூறுவதைப் போன்று நாங்கள் செய்ய முடியாது என கூறி கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
இதனால் அதிகாரிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மழை பாதிப்பு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கவில்லை என்பதை போன்று அதிகாரிகளின் செயல்பாடுகளால் டெல்டா விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

