/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புயலால் பாதித்த பயிர்களை வேளாண் அதிகாரி ஆய்வு
/
புயலால் பாதித்த பயிர்களை வேளாண் அதிகாரி ஆய்வு
ADDED : டிச 09, 2024 05:27 AM
சிறுபாக்கம் : சிறுபாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் மாங்குளம், அடரி, பொயனப்பாடி, கச்சிமயிலூர், மங்களூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு, பெஞ்சல் புயலால் பெய்த மழையில் சாகுபடி செய்த, மக்காச்சோளம், உளுந்து, வரகு, நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன.
இதனை, வேளாண் மாவட்ட இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.
அதில், பாதிக்கப்பட்ட பயிர்களின் கணக்கெடுப்பு பணிகள், புள்ளி விபரங்கள், பரப்பளவு, செலவினம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது, மங்களூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கீர்த்தனா, துணை அலுவலர் ராமசாமி, உதவி அலுவலர் கோவிந்தசாமி, தகவல் தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் செல்லமுத்து, முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.