/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.சி., கட்சியினரை கண்டித்து அ.தி.மு.க., சாலை மறியல்
/
வி.சி., கட்சியினரை கண்டித்து அ.தி.மு.க., சாலை மறியல்
வி.சி., கட்சியினரை கண்டித்து அ.தி.மு.க., சாலை மறியல்
வி.சி., கட்சியினரை கண்டித்து அ.தி.மு.க., சாலை மறியல்
ADDED : ஜூலை 12, 2025 03:35 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே கொடிகம்பம் வைக்க வி.சி., கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து அ.தி.மு.க., வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி கடலுார், பண்ருட்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இன்று (12ம் தேதி) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இவரை வரவேற்க அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செய லாளர் காசிநாதன் தலைமையில் நிர்வாகிகள் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் நேற்று மாலை சாலையோரம் கொடிகள் நட்டு வைத்தனர்.
அப்போது, அங்கு வந்த வி.சி., வழக்கறிஞர் பிரிவு ராஜி தலைமையிலான நிர்வாகிகள், இப்பகுதியில் எந்த கட்சிக் கொடியையும் கட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சமாதானம் செய்ததை தொடர்ந்து, அ.தி.மு.க., வினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் காரணமாக 5:40 மணி முதல் 6:00 மணி வரை 20 நிமிடம் கடலுார்-பண்ருட்டி சாலையில் போக்குவரத்து பாதித்தது.