/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'மாஜி' முதல்வர் பிறந்த நாள் கடலுாரில் அ.தி.மு.க., ரத்த தானம்
/
'மாஜி' முதல்வர் பிறந்த நாள் கடலுாரில் அ.தி.மு.க., ரத்த தானம்
'மாஜி' முதல்வர் பிறந்த நாள் கடலுாரில் அ.தி.மு.க., ரத்த தானம்
'மாஜி' முதல்வர் பிறந்த நாள் கடலுாரில் அ.தி.மு.க., ரத்த தானம்
ADDED : மே 12, 2025 12:25 AM

கடலுார்: கடலுாரில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம் நடந்தது.
வடக்கு மாவட்ட அ.தி.மு.க., மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு, மாவட்ட அண்ணா தொழிற்சங்கம், மாவட்ட மருத்துவர் அணி சார்பில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சம்பத் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
மாநில மருத்துவர் அணி தலைவர் சீனுவாசராஜா, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் பிரித்திவிராஜ், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆனந்தகுமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவர் குமார் முன்னிலை வகித்தனர்.
50க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் தானமாக கடலுார் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் நவநீதகிருஷ்ணன், இணை செயலாளர் வெங்கடேசன், ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ், மாநகர பகுதி செயலாளர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், கந்தன், வினோத்ராஜ், மாவட்ட துணை செயலாளர் பக்கிரி, மகளிர் அணி செயலாளர் சாந்தி, மீனவர் பிரிவு செயலாளர் குப்புராஜ், வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், மாணவரணி செயலாளர் எரிதழல் சிவா, இலக்கிய அணி செயலாளர் ஏழுமலை, மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் மணிமாறன், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் பாலாஜி, ராஜி, ராம்குமார், கோபிநாத், துணை செயலாளர் பிரகாஷ், அருள் (எ) கதிரவன், மாவட்ட துணை தலைவர் தினேஷ் ஆதிநாராயணன், ஸ்ரீதர், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெயராமன், கனகராஜ், பிரகாஷ், கலைகுமரன், பகுதி செயலாளர்கள் தனசேகரன், அப்புவிக்னேஷ், விக்னேஷ், மணிமாறன் பங்கேற்றனர்.