/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : அக் 12, 2025 05:06 AM

சிதம்பரம் : கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி நிர்வாகி கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சிதம்பரம் அடுத்த சிவபுரியில் நடந்த ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாவட்ட அவைத் தலைவர் குமார், இளைஞரணி செயலாளர் முருகையன், பாசறை செயலாளர் வசந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஜெ., பேரவை இணைச் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கிருபானந்தன் ஆகியோர் பங்கேற்று, பாக கிளை நிர்வாகிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் செங்குட்டுவன், சந்திரமோகன், ராமலிங்கம், மகளிர் அணி அமுதா ரவிச்சந்திரன், அறிவுச்செல்வி, கார்த்தி, சுந்தரம், வேல்முருகன், சசிகுமார், ராதாகிருஷ்ணன், சங்கர், கார்த்தி, வெற்றிசெல்வி, மணிமாறன், விஜய், ஆனந்த், பிரம்மராஜன், மோகன், ஜவான் குமார், செல்வராஜன், சண்முகநாதன்.
சுரேஷ்குமார், துரை, சக்கரபாணி, முனுசாமி, திருஞானம், செல்வநாதன், குமார், செல்லதுரை, சக்கரவர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட பாசறை துணைத் தலைவர் குணசேகரன் நன்றி கூறினார்.