/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்; எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்; எம்.எல்.ஏ., பங்கேற்பு
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்; எம்.எல்.ஏ., பங்கேற்பு
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்; எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : அக் 07, 2025 12:25 AM

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை வடக்குப்பாளையத்தில் கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார்.முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம். மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன், மாவட்ட இணை செயலாளர்கள் திருமலை, திருச்செல்வம், ராமதாஸ், ஒன்றிய அவைத் தலைவர் பரமானந்தம், ஒன்றிய பொருளாளர் வாகீசம்பிள்ளை முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் ஜோதிபிரகாஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் இளவரசன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சண்முகம் பங்கேற்றனர்.