ADDED : அக் 07, 2025 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி;புவனகிரியில் காங்., கட்சி சார்பில், பா.ஜ., அரசின் ஓட்டு திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
மாவட்ட துணைத் தலைவர் விநாயகம், நிர்வாகிகள் நாகராஜன், லட்சுமணன், முகமது அலி, ஜோதி, சம்பத் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினரான டாக்டர் செந்தில்வேலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. நிகழ்ச்சியில், நிர்வாகிகள் அருள்ஜோதி, அகமதுல்லா, ஜாபர், பெருமாள், ஜோதி, மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரவி நன்றி கூறினார்.