வாக்காளர்களுக்கு அ.தி.மு.க., வேட்பாளர் நன்றி தெரிவிப்பு
வாக்காளர்களுக்கு அ.தி.மு.க., வேட்பாளர் நன்றி தெரிவிப்பு
ADDED : ஜூன் 20, 2026 07:55 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட, வாக்காளர்களுக்கு, அ.தி.மு.க., வேட்பாளர் நன்றி தெரிவித்தார்.
சிதம்பரம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அவருடன், முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் முருகன், நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், ஜெ., பேரவை செயலாளர் சந்தர் ராமஜெயம், நகர அவைத் தலைவர் மலைமோகன், கவுன்சிலர் ஜெயந்தி , முன்னாள் கவுன்சிலர் ரவி, நிர்வாகிகள் ராஜேஷ் துகார், திருமூர்த்தி, பாஸ்கர், கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
