தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொழிலாளியை கடத்தி சென்று தாக்கிய இருவர் கைது

 தொழிலாளியை கடத்தி சென்று தாக்கிய இருவர் கைது

 தொழிலாளியை கடத்தி சென்று தாக்கிய இருவர் கைது


ADDED : ஜூன் 20, 2026 07:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 07:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி: தொழிலாளியை பைக்கில் கடத்திச் சென்று தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனர்.

திட்டக்குடி அடுத்த நெடுங்குளம், பழைய காலனியை சேர்ந்தவர் கோபி, 27; கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை துாக்கும் கூலி தொழிலாளி.

இவர் கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு கடந்த வாரம் வந்தார். நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த அருள்பாண்டி என்பவரின் வீட்டின் முன்பு நின்றிருந்தார்.

அப்போது, அங்கு வந்த திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தை சேர்ந்த ஆங்கி (எ) ராதாகிருஷ்ணன், கோழியூர் குணா, ஆனந்தராஜா, சிவா, போத்திரமங்கலம் அருண், ஒகளூர் மதன், 19, மேட்டுகாளிங்கராயநல்லூர் பாலா (எ) பாலமுருகன், 27, ஆவினங்குடி வெற்றி ஆகியோர் முன்விரோதம் காரணமாக கோபியை திட்டி தாக்கி, பைக்கில் கோழியூர் அருகே உள்ள கோவிலுக்கு கடத்தி சென்று, தாக்கி, கொ லை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து, கோபி கொடுத்த புகாரின்பேரில், ராதாகிருஷ்ணன் உட்பட 8 பேர் மீது திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து பைக்கை பறிமுதல் செய்து, மதன், பாலமுருகன் இருவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள 6 பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us