/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'யார் அந்த சார்' ஸ்டிக்கர் ஒட்டி அ.தி.மு.க., நிர்வாகிகள் கோஷம்
/
'யார் அந்த சார்' ஸ்டிக்கர் ஒட்டி அ.தி.மு.க., நிர்வாகிகள் கோஷம்
'யார் அந்த சார்' ஸ்டிக்கர் ஒட்டி அ.தி.மு.க., நிர்வாகிகள் கோஷம்
'யார் அந்த சார்' ஸ்டிக்கர் ஒட்டி அ.தி.மு.க., நிர்வாகிகள் கோஷம்
ADDED : ஜன 10, 2025 06:38 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் யார் எந்த சார் ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டி அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்முறையை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, விருத்தாசலத்தில் அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில் யார் எந்த சார் என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் பஸ் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். பாசறை மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். அப்போது, அக்கட்சியினரின் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் யார் அந்த சார் ஸ்டிக்கரை ஒட்டி, தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷமிடப்பட்டது.
நகர துணை செயலாளர் மணிவண்ணன், நகர தலைவர் தங்கராசு, ஒன்றிய செயலாளர் வேல்முருகன், பொருளாளர் முக்தார் அலி, நிர்வாகிகள் வளர்மதி, கண்ணன், செல்வகணபதி, ஆண்டாள் கலிவரதன், மணி, தினேஷ், ராக்கி, சக்தி பாலன், சோமு, ராஜேந்திரன், ரஞ்சித், பேரவை அருள், முரளி உடனிருந்தனர்.

