/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் வந்த முன்னாள் முதல்வருக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்பு
/
சிதம்பரம் வந்த முன்னாள் முதல்வருக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்பு
சிதம்பரம் வந்த முன்னாள் முதல்வருக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்பு
சிதம்பரம் வந்த முன்னாள் முதல்வருக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் வரவேற்பு
ADDED : ஜூலை 17, 2025 12:42 AM
காட்டுமன்னார்கோவில் : சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடியில் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி , 'மக்களை காப்போம்
தமிழகத்தை மீட்போம்' சுறுப்பயணத்தின் ஒரு பகுதியாக சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் புவனகிரி தொகுதியில் மக்களை சந்திக்க வருகை தந்தார்.
நேற்று முன்தினம் இரவு, அரியலுார் மாவட்டத்திலிருந்து காட்டுமன்னார்கோவில் வழியாக சிதம்பரம் வருகை தந்த முன்னாள் முதல்வனர் பழனிசாமிக்கு காட்டுமன்னார்கோயில் அ.தி.மு.க., சார்பில், குருங்குடி சுங்கசாவடி அருகில் அமைப்புச் செயலாளர், முருகுமாறன், தலைமையில் வரவேற்பு அளித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம் .எல். ஏ., முன்னாள் அமைச்சர்கள் செல்வி ராமஜெயம், ஜெயபால், முன்னிலை வகித்தனர்.
காட்டுமன்னார்கோயில் ஒன்றிய செயலாளரகள் வாசு முருகையன், சிவகுமார் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட நிர்வாகிகள் கானுார் பாலசுந்தரம், குணசேகரன், மாரிமுத்து, வசந்தகுமார், என்னேரி பிரபு, மார்க்கெட் நாகராஜ், வாசுதேவன், வழக்கறிஞர் குணசேகரன், கருப்பு ராஜா, சுவாமிநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
சிதம்பரம்: மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் சுந்தர், முன்னாள் மாவட்ட சேர்மன் திருமாறன், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட துணை செயலாளர்கள் செல்வம், தேன்மொழி காத்தவராயசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்காரவேல், கருணாமூர்த்தி, மாவட்ட பாசறை செயலாளர் வசந்த்.
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சுதாகர்,மாவட்ட மீனவரணி இணை செயலாளர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் வசந்தி சுதந்திரதாஸ், ஒன்றிய பொருளாளர் பாஸ்கர், பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன்,மாவட்ட மாணவரணி இணை செயலாளர் தெய்வீகராஜன் ஆகியோர் பங்கேற்று வரவேற்பு அளித்தனர்.