/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் போட்டியிட அ.தி.மு.க., வினர் மனு
/
பண்ருட்டியில் போட்டியிட அ.தி.மு.க., வினர் மனு
ADDED : டிச 21, 2025 05:59 AM

பண்ருட்டி: பண்ருட்டி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சம்பத், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.
பண்ருட்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட முன்னாள் அமைச்சர் எம்.சி., சம்பத் சென்னை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் செம்மலை, கோகுல இந்திராவிடம் விருப்ப மனு கொடுத்தார்.
இதே போல் கடலுார் வடக்கு மாவட்ட, அ.தி.மு.க. ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றம் செயலாளர் நத்தம் கோபு, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கலையரசன், பண்ருட்டி தொகுதி அண்ணா கிராமம் ஒன்றிய மேற்கு செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகபூஷணம், தெற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், வடக்கு ஒன்றிய செயலாளர் சிவா மற்றும் பண்ருட்டி நகர செயலாளர் மோகன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சேகர், பட்டாம்பாக்கம் பேரூர் செயலாளர் அர்ஜுனன், தொரப்பாடி நகர செயலாளர் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பண்ருட்டி அவைத்தலைவர் ராஜதுரை ஆகியோரும் தனித்தனியே போட்டியிட விருப்ப மனு அளித்தனர் .

